Monday 21 October 2013

இறைவன் என்பது மத விசுவாசிகளால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனைப் பொருளன்று. மன உணர்வுகளுக்கு அப்பால் சென்றவர்களால், நன்றாக உணர்ந்து அநுபவிக்கக்கூடிய ஒரு சம்பூர்ண சத்தியம். அப்பியாசத்தினாலும்,
ஆராய்வினாலும் அதைத் தெள்ளத் தெளிவாக அறிகின்றவர்கள் இன்னல் அகன்று நிலையான சுகத்தை அடைகின்றனர்.

ஹிந்து மதம் ஒரு தனிப் ப்ரவாசகனால் உண்டாக்கப்பட்டதல்ல. அதை மதம் என்று சொல்வதைவிடச் சனாதன தர்மம் என்று கூறுவதுதான் பொருத்த-
முடையதாயிருக்கின்றது. ஆகையால் அது ஜாதி மதங்களைக் கடந்து நிற்கின்றது. சனாதன தர்மத்தை கடைப்பிடித்து ஒழுகின்றவர்கள் யாராயிருந்தாலும் சரி அவர்கள் அனைவரும் ஹிந்துக்கள்.